எங்கள் வீட்டுத் தோட்டம் 2019
வெ செல்வராஜ், பொள்ளாச்சி
மாமரத்தில் காய்ப்பு சென்ற வருடத்தை விட நன்றாக இருந்தது. மிகவும் சுவையான பழங்கள். நிலத்தில் இருந்திருந்தால் மிகவும் நன்றாக விளைச்சல் கொடுத்திருக்கும்.
| முலாம்பழம் |
| சேனை கிழங்கு |
| கம்பு |
கம்புவை கழுவி ஊற்றிய தண்ணீரில் இருந்து வளர்ந்த கம்பு பயிர்கள். குருவிகளுக்காக வளர்த்தது, அவைகள் விரும்பி சாப்பிட்டன.
| முட்டைகோஸ் |
இந்த வருடம் இரண்டு திராட்சை கொடிகளிலும் காய்ப்பு சரியில்லை.
| மருதாணி |
| பொன்னாங்கன்னி கீரை |
| குடை மிளகாய் |
இவ்வளவு பூக்கள் பூத்த ரோஜாச்செடியில் இப்போது இரண்டு குச்சிகள் மட்டுமே உள்ளன. ஆனாலும் அது பூத்துக்கொண்டு தான் உள்ளது.
கொத்துக்கொத்தாக பூத்த இந்த செடி இப்போது முழுவதும் காய்ந்துவிட்டது. பக்கத்து இடத்தில் கட்டிட வேலை நடப்பதால் மேற்குப்பக்கம் உள்ள செடிகள் பெரும்பாலும் காய்ந்துவிட்டன.
இந்த வருடம் தோட்டம் அவ்வளவு சிறப்பானதாக இல்லை.
தொடரும்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக