வெள்ளி, 16 ஜூன், 2017

எங்கள் வீட்டுத்தோட்டம் 2016






தோட்டத்திற்காக உருவான அறை 
    

      சென்ற ஆண்டு(2015)  பொங்கலுக்கு வாங்கிய கரும்பின் கணுவை ஒரு தொட்டியில் நட்டு வைத்ததில் இரண்டுமே நன்றாக வளர்ந்தன.   தரையில் வளரும் அளவிற்கு வளரவில்லை என்றாலும் ஓரளவு நன்றாகவே வளர்ந்தன.  சுவையாகவும் இருந்தன.







          விதைத்த முள்ளங்கி விதைகள்  எல்லாமே முளைத்தன.  காய்களின் வளர்ச்சியும் நன்றாகவே இருந்தன.  சிலசமயங்களில் சிறிதளவு பூச்சித்தாக்குதல் இருந்தது.  இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து (Sakthi Triple Action) மற்றும் வேப்ப எண்ணை கலந்து தெளித்ததும் சரியாகிவிட்டது.  







          எங்கள்  தோட்டத்தில்  தொடர்ந்து  இடம்பெறும் கொடி  பொரியல் தட்டை. செடிகள் மட்டுமல்ல காய்களும் மிக வேகமாக வளரக்கூடியவை.  பச்சை மற்றும் சிவப்பு நிற  வகை காய்கள் உண்டு.  அடிக்கடி, சுலபமாக அஸ்வினி பூச்சித் தாக்குதலுக்கு ஆளாகிவிடும்.  மருந்து தெளிப்பதுடன் பூச்சிகளை கையுறை அணிந்து நசுக்கியும் கட்டுப்படுத்தலாம்.





          சீத்தாப்பழச் செடி, வீட்டுப்பக்கத்தில் முளைத்திருந்ததை எடுத்து தொட்டியில் வைத்தது, சுமார் ஒரு வருடத்தில் காய்க்க ஆரம்பித்துவிட்டது. சுவையான பழங்கள்.













வெற்றிலைக்கொடி 
\


          தொட்டியில் வளர்ந்த புடலங்காய்க் கொடியில் ஓரளவு தான் காய்கள் காய்த்தன.  பச்சை புழுக்களின் தாக்குதல் அவ்வப்பொழுது இருந்தன.  செடியின் வளர்ச்சியும் சுமாராகத் தான் இருந்தது.




          இரண்டாவதாக ஒரு பன்னீர் திராட்சைக் கொடியை தொட்டியில் வைத்தேன்.   வளர்ச்சி வேகமாகவே இருந்தது. நட்ட ஆறு மாதங்களில் ஒரு நாள் பார்க்கும்போது  இலைகளின் மறைவில் இரண்டு சிறிய கொத்து பழங்கள் இருந்தன.  விரைவில் காய்க்க ஆரம்பித்துவிட்டது.






பூசணி 


வாழை - இரண்டாவது குலை 


தோட்டம் தொடரும்....