ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

திராட்சை 
                                                                                            - வெ. செல்வராஜ், பொள்ளாச்சி  

              திராட்சை செடி மீதும் ஆசை வந்தது.  மாடியில் வளர்ப்போம் என்று    மே 2014ல் ஒரு செடியை  வாங்கி வந்து பெரிய பிளாஸ்டிக் தொட்டியில் வைத்தேன். ஆரம்பத்தில் நன்றாக வளர்ந்தது.  பிறகு இலைகள் எல்லாம் உதிர்ந்து வெறும் குச்சி மட்டுமே இருந்தது.  







               மறுபடியும் நன்றாக தழைத்தது.  ஜூன் 2015ல் பூ எடுத்தது.  மூன்று கொத்துகள் மட்டுமே காய்த்தன.






 







             தினந்தோறும் அதன் வளர்ச்சியை பார்த்துக் கொண்டு வந்தேன்.  ஒரு நாள் காலை பார்த்தபோது மூன்று கொத்துகளையும் காணவில்லை.  என்ன மாயம் என்று தெரியவில்லை.  எப்படி போனது என்று புரியவில்லை.  அடுத்த காயப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.