வெள்ளி, 30 மார்ச், 2018

எங்கள் வீட்டுத் தோட்டம் 2017

வெ. செல்வராஜ்,  பொள்ளாச்சி

              சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் தோட்டம் சிறப்பாகவே இருந்தது.  சென்ற வருடம் வைத்த வெற்றிலைக்கொடி நன்றாக வளர்ந்து வாசலுக்கு  தோரணமாக அமைந்துவிட்டது.



வெற்றிலைக்கொடி 




           ரோஜாச்செடி சுமார் பத்தடி உயரம் வளர்ந்து சிறு மரம் போலவே காட்சி தருகிறது.  நிறைய பூக்கிறது.

          இரண்டாவதாக வைத்த திராட்சைக்  கொடியில் ஓரளவு பழங்கள் கிடைத்தன, ஆனாலும் காய்ப்பு குறைவுதான்.  திராட்சை பழுக்க ஆரம்பிக்கும்போதே இரவில் வவ்வாலின்  தொந்தரவும், பகலில் காக்கைகளின் தொந்தரவும் ஆரம்பித்துவிட்டன.  அதனால் வலை போன்ற துணியில்  பை செய்து ஒவ்வொரு குலைக்கும் கட்டிவிட்டோம்.  இது  நல்ல பலன் கொடுத்தது.  












மாதுளை 

             தானாக வளர்ந்த மாதுளை,  காய்க்க ஆரம்பித்துள்ளது. 


தட்டைப்பயிர் 


இருவகை தட்டைப்பயிர் 



புதினா 


எலுமிச்சை 






              எலுமிச்சை மரம் வைத்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.   காய்க்க  ஆரம்பித்துவிட்டது.  முதல் காய்ப்பில் சுமார்  பத்து பழங்கள் கிடைத்தன.


சீத்தாப்பழம் 












நான்கு வகை கத்திரிக்காய்கள் 

                 இந்த வருடம் நான்கு வகையான கத்திரிக்காய்கள் பயிரிட்டோம்.  நன்றாக காய்த்தன.  


பூசணிக்காய் 


அரசாணிக்காய் 


முலாம்பழம் 


நொச்சிச்செடி 


வெள்ளரிப்பழம் 



 கொத்தவரங்காய் 


        கொத்தவரங்காய் விதை, கடையில் வாங்கியது, முளைப்புத்திறன் குறைவாகவே இருந்தது.  குறைவான விதைகளே முளைத்தன.  காய்ப்பு நன்றாக இருந்தாலும் செடிகள் சீக்கிரம் காய்ந்துவிட்டன.  



தோட்டம் தொடரும்.......