ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

எங்கள் வீட்டு ரோஜா

- வெ.செல்வராஜ், பொள்ளாச்சி


       மலர்கள் இல்லாமல் தோட்டம்  அழகு பெறாது.  அதிலும் ரோஜா இல்லாமல் தோட்டம் முழுமை பெறாது.  புதிய தோட்டம் தயாரானதும் முன்புறம் 3 ரோஜா செடிகளும் மேற்குப்புறம் 5 செடிகளும் வைத்தேன்.  அதனுடன் பழைய வீட்டில் இருந்து கொண்டு வந்த  ரோஜாச்செடி ஒன்றும் தொட்டியில்.  அதன் பின் மாடியில் தொட்டியில் மேலும்  8 செடிகள் வைத்தேன். முன்புறம் வைத்த 3 செடிகளின் இருபுறமும் மாதுளை மற்றும் ஜாதிமுல்லைச் செடிகள் வளர்ந்து விட்ட காரணத்தால் ரோஜாச் செடிகள் சரியாக வளராமல் அப்படியே நின்றுவிட்டன. அதில் ஒன்றை எடுத்து தொட்டியில் வைத்ததில் அது நன்றாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

     மொத்தம் இருந்த 17 செடிகளில் ஒரு செடி காய்ந்து விட்டது, 4 செடிகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. பனி மற்றும் நோயின்  காரணமாக சற்றே கருகிய செடிகளில் 6 செடிகள்  இப்பொழுது துளிர்க்க ஆரம்பித்துவிட்டன.  6 செடிகள் நன்றாக உள்ளன. இவற்றிற்கு உரமாக ஆட்டு எருவும் உடன் சிறிதளவு வேப்பம்புண்ணாக்கும் இடுகிறேன்.  அவ்வப்பொழுது மண்புழு உரமும் இட்டு வருகிறேன்.  ஆனால் சில செடிகளைத் தவிர மற்ற செடிகளின் வளர்ச்சி அவ்வளவு திருப்தியாக இல்லை.



                          




     

மேலே உள்ளது நிறம் மாறும் ரோஜா. சுமார் 6 வருடங்களாக தொட்டியில் இருந்து பூத்துக்கொண்டிருக்கிறது.


                                                                                                                



                                                       



                                                       





கீழே உள்ள செடியை பாருங்கள்.



                              

எவ்வளவு அழகான மலர்கள்.  இந்த செடி எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து பூத்துக்கொண்டிருக்கிறது.


மற்ற மலர்கள்

எங்கள் தோட்டத்தில் ரோஜாவைத் தவிர மேலும் சில மலர்களும் உண்டு.  செவ்வந்தி, மல்லிகை,  ஜாதிமுல்லை (பிச்சிப்பூ), செம்பருத்தி, செவ்வரளி,  தங்க அரளி,  மாடியில் தொட்டியில் செண்பகப்பூ மற்றும் சில அழகு மலர்களும் உண்டு.


                                                   








நன்றி

வியாழன், 9 ஏப்ரல், 2015

எங்கள் வீட்டுத் தோட்டம் - 2013

வெ.செல்வராஜ்,  பொள்ளாச்சி

புதிய தோட்டம் 
       புதிய வீடு கட்டி ஜூன் 2013ல் குடி வந்தோம்.  1925 சதுர அடி இடத்தில் 1100 சதுர அடி வீடு போக மீதம் இருக்கும் இடத்தில் தோட்டம் அமைக்க சிறிதளவு இடம் தான் கிடைத்தது.  மேற்குப் பகுதியில் 40 x 1 ½ அடி, முன்புறம் வலப்பக்கம் 10 x 6 அடி, இடப்பக்கம் 10 x 2 அடி.  இதில் தான் ஆசைப்பட்ட எல்லா செடிகளையும் மரங்களையும் வளர்க்க வேண்டிய கட்டாயம்.
     இதில் புதிதாக செம்மண் போட்டு ஆட்டு எரு, வேப்பம்புண்ணாக்கு மற்றும் மக்கிய உரம் ஆகியவற்றை கலந்து மண்ணை வளப்படுத்தினேன்.  என் அம்மாவும் என் மகனும் சேர்ந்து இதில்  ஒரு பக்கத்தில் நவதானியங்களையும் மற்ற எல்லா இடதிலும் மக்காச்சோளத்தையும் விதைத்து விட்டனர்.  அவை தளதளவென்று, சுமார் 12 அடி வரையில் கூட, வளர்ந்துவிட்டன.  அமோகமான அருமையான விளைச்சல்.  இடையில் நிறைய தக்காளிச்செடிகள் தானாகவே முளைத்து வந்தன.  அவையும் நன்றாக வளர்ந்து நிறைய பழங்களை தந்தன.









       மக்காச்சோள அறுவடைக்குப் பிறகு முன்புறம் அந்த சிறிய  இடத்தில் கொய்யா, மாதுளை, சப்போட்டா மற்றும் ஆரஞ்சு ஆகிய நான்கு நாற்றுக்களையும் நட்டேன் (ஆசை தான்).  அவை நன்றாகவே வளர்ந்து கொண்டிருக்கின்றன.  கேரட் மற்றும் பீட்ரூட் விதைகள் விதைத்ததில் இரண்டு கேரட் செடிகள் மட்டுமே நன்கு வளர்ந்தன.  கேரட்டும் பெரிய காய்களாக வந்தன.
கேரட் செடிகள் 

கொய்யா, சப்போட்டா, மாதுளை, ஆரஞ்சு 


           மண் வளமாக இருந்த காரணத்தால் சாமந்திப்பூ, மிளகாய், வேர்க்கடலை என  எல்லா   செடிகளும் நன்றாகவே வளர்ந்தன. 

அழகுச்  செடிகள் 

வானம் பார்த்த மிளகாய் 

மாடிதோட்டம் 
         மாடித்தோட்டம் ஆரம்பிக்கலாம் என்று மாடியில் பாலிதீன் சாக்கை விரித்து அதில் செம்மண், மணல், ஆட்டு எரு  ஆகியவற்றை கலந்து அதில் வெள்ளரி விதைகளை விதைத்தேன்.  ஆச்சர்யப்படும் வகையில் அவை நன்றாக வளர்ந்து நிறைய காய்கள் கிடைத்தன.



        அதற்குப பிறகு மாடிததோட்டத்தையும் செம்மைப்படுத்த ஆரம்பித்தேன்

    


(தோட்டம் தொடரும் ...)