திராட்சை 2016
- வெ.செல்வராஜ், பொள்ளாச்சி
- வெ.செல்வராஜ், பொள்ளாச்சி
மாடியில் வைத்த திராட்சை செடியில் மறுபடியும் டிசம்பர் 2015 ல் பூ எடுக்க ஆரம்பித்தன. 2 பெரிய கொத்துகளும் 5 சிறிய கொத்துகளும் காய்த்தன. பழங்கள் லேசான புளிப்புடன் மிக சுவையாக இருந்தன. பறிப்பதற்கு முன் ஓரளவு பழங்கள் வவ்வாலுக்கு உணவாகிவிட்டன.
இந்த கொடிக்கென்று இதுவரை எந்தவித தனிகவனமும் செலுத்தவில்லை. கொஞ்சம் நல்லபடியாக கவனித்திருந்தால் காய்ப்பு நன்றாக இருந்திருக்கும். இப்பொழுதுதான் இது சம்பந்தமான விவரங்களை சேகரித்து வருகிறேன்.
இணையத்தில் தேடியபோது, ஒருவர் வீட்டைச் சுற்றி திராட்சையை நடவு செய்து அவற்றை மாடியில் பந்தல் போட்டு படரவிட்டு நல்ல மகசூல் எடுத்திருந்ததை பார்த்தேன். சிறப்பாக இருந்தது. முயற்சிக்க வேண்டும்.