சனி, 21 மே, 2016

மாமரம்  2016

                                                                                             - வெ.செல்வராஜ்,  பொள்ளாச்சி 

         மாடியில் தொட்டியில் வைத்த மாமரம் மறுபடியும் டிசம்பரில் பூக்க ஆரம்பித்தது.  நிறைய பூக்கள் பூத்தன.  ஓரளவு பிஞ்சுகளும் பிடித்தன.  அதில் ஏழு காய்கள் மட்டும் பெரிதாகின.  










                 அதில் இரண்டை காய்களாக பறித்துவிட்டோம்.  மற்ற ஐந்து காய்களையும் மரத்திலேயே நன்கு பழுக்க விட்டு பறித்தோம். நல்ல சுவை,  அல்போன்சா என நினைக்கிறேன்.









            மரத்திற்கு பெரிதாக பராமரிப்பு தேவைப்படவில்லை.  அவ்வப்பொழுது சாண உரம், மண்புழு உரம் இடுவதுண்டு, மற்றும் பஞ்சகவ்யா தெளிப்பதுண்டு. இதுவரை பூச்சித் தொல்லை இல்லை.  அடுத்த முறை இன்னும் அதிகமாக காய்க்க வைக்க வேண்டும்.