ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

திராட்சை 
                                                                                            - வெ. செல்வராஜ், பொள்ளாச்சி  

              திராட்சை செடி மீதும் ஆசை வந்தது.  மாடியில் வளர்ப்போம் என்று    மே 2014ல் ஒரு செடியை  வாங்கி வந்து பெரிய பிளாஸ்டிக் தொட்டியில் வைத்தேன். ஆரம்பத்தில் நன்றாக வளர்ந்தது.  பிறகு இலைகள் எல்லாம் உதிர்ந்து வெறும் குச்சி மட்டுமே இருந்தது.  







               மறுபடியும் நன்றாக தழைத்தது.  ஜூன் 2015ல் பூ எடுத்தது.  மூன்று கொத்துகள் மட்டுமே காய்த்தன.






 







             தினந்தோறும் அதன் வளர்ச்சியை பார்த்துக் கொண்டு வந்தேன்.  ஒரு நாள் காலை பார்த்தபோது மூன்று கொத்துகளையும் காணவில்லை.  என்ன மாயம் என்று தெரியவில்லை.  எப்படி போனது என்று புரியவில்லை.  அடுத்த காயப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.


2 கருத்துகள்:

  1. திராட்சை அருமையாக வந்திருக்கிறது. உரம் மற்றும் பராமரிப்பு பற்றி கூற முடியுமா?நானும் இப்போது தான் ஒன்றை வைத்து விட்டிருக்கிறேன்.

    கொத்தோடு காணவில்லை என்றால் யாராவது பறித்திருப்பார்கள். இப்படி முதல் விளைச்சலையே எப்படி இருக்கிறது என்று பார்பதற்குள் பறித்துக் கொண்டு போனால் வருத்தம் தான். மீண்டும் நிறைய காய்க்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி. மற்ற செடிகளைப் போலவே இதற்கும் ஆட்டு உரம்/மாட்டுச் சாணம் மற்றும் சிறிதளவு மண்புழு உரம் இடுகிறேன். இந்த ஒன்றரை ஆண்டுகளில் நான்கு முறை உரம் இட்டுள்ளேன், மற்றபடி பெரிய அளவு பராமரிப்பு தேவைப்படவில்லை. இதுவரை பூச்சித் தாக்குதல் இல்லை.

      நீக்கு