எங்கள் வீட்டுத் தோட்டம் 2018
வெ.செல்வராஜ், பொள்ளாச்சி
இந்த வருடம் மாடியில் செண்பகப்பூ நிறைய பூத்தது. எதிர்பார்த்ததைவிட நன்றாகவே பூத்தது.
இந்த வருடம் ஐந்து விதமான கத்திரிக்காய்கள் பயிரிட்டோம். காய்கள் நன்றாக காய்த்தன. முழுவதும் இயற்கை உரமிட்ட காரணத்தால் மிகவும் சுவையாக இருந்தன.
| சுண்டைக்காய் |
இங்கு நடைபெற்ற விவசாய கண்காட்சியில் இருந்து நான்கு காலிபிளவர் நாற்றுகள் வாங்கி வந்து வைத்ததில் நான்கும் நன்றாக வளர்ந்து பூக்கள் கொடுத்தன.
அதேபோல் ஒரு நர்சரியில் இருந்து முட்டைகோஸ் நாற்றுகள் நான்கு வாங்கி வந்து வைத்ததில் அவையும் நன்றாக வளர்ந்தன. பூக்களும் நன்றாக வந்தன (அலைபேசியுடன் புகைப்படங்களும் தொலைந்துவிட்டன).
| முட்டைகோஸ் |
| புதினா |
மாமரத்தில் இந்த வருடமும் காய்ப்பு குறைவுதான். 7 மாங்கனிகள் மட்டுமே கிடைத்தன.
இந்த வருடம் எலுமிச்சை மரத்தில் சுமார் 25 காய்கள் கிடைத்தன.
கீழே நிலத்தில் வைத்துள்ள ஆரஞ்சு மரத்தில் நான்கு காய்கள் காய்த்தன, ஆனால் பழுக்கும் முன்பே உதிர்ந்துவிட்டன.
தோட்டம் தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக