வியாழன், 9 ஏப்ரல், 2015

எங்கள் வீட்டுத் தோட்டம் - 2013

வெ.செல்வராஜ்,  பொள்ளாச்சி

புதிய தோட்டம் 
       புதிய வீடு கட்டி ஜூன் 2013ல் குடி வந்தோம்.  1925 சதுர அடி இடத்தில் 1100 சதுர அடி வீடு போக மீதம் இருக்கும் இடத்தில் தோட்டம் அமைக்க சிறிதளவு இடம் தான் கிடைத்தது.  மேற்குப் பகுதியில் 40 x 1 ½ அடி, முன்புறம் வலப்பக்கம் 10 x 6 அடி, இடப்பக்கம் 10 x 2 அடி.  இதில் தான் ஆசைப்பட்ட எல்லா செடிகளையும் மரங்களையும் வளர்க்க வேண்டிய கட்டாயம்.
     இதில் புதிதாக செம்மண் போட்டு ஆட்டு எரு, வேப்பம்புண்ணாக்கு மற்றும் மக்கிய உரம் ஆகியவற்றை கலந்து மண்ணை வளப்படுத்தினேன்.  என் அம்மாவும் என் மகனும் சேர்ந்து இதில்  ஒரு பக்கத்தில் நவதானியங்களையும் மற்ற எல்லா இடதிலும் மக்காச்சோளத்தையும் விதைத்து விட்டனர்.  அவை தளதளவென்று, சுமார் 12 அடி வரையில் கூட, வளர்ந்துவிட்டன.  அமோகமான அருமையான விளைச்சல்.  இடையில் நிறைய தக்காளிச்செடிகள் தானாகவே முளைத்து வந்தன.  அவையும் நன்றாக வளர்ந்து நிறைய பழங்களை தந்தன.









       மக்காச்சோள அறுவடைக்குப் பிறகு முன்புறம் அந்த சிறிய  இடத்தில் கொய்யா, மாதுளை, சப்போட்டா மற்றும் ஆரஞ்சு ஆகிய நான்கு நாற்றுக்களையும் நட்டேன் (ஆசை தான்).  அவை நன்றாகவே வளர்ந்து கொண்டிருக்கின்றன.  கேரட் மற்றும் பீட்ரூட் விதைகள் விதைத்ததில் இரண்டு கேரட் செடிகள் மட்டுமே நன்கு வளர்ந்தன.  கேரட்டும் பெரிய காய்களாக வந்தன.
கேரட் செடிகள் 

கொய்யா, சப்போட்டா, மாதுளை, ஆரஞ்சு 


           மண் வளமாக இருந்த காரணத்தால் சாமந்திப்பூ, மிளகாய், வேர்க்கடலை என  எல்லா   செடிகளும் நன்றாகவே வளர்ந்தன. 

அழகுச்  செடிகள் 

வானம் பார்த்த மிளகாய் 

மாடிதோட்டம் 
         மாடித்தோட்டம் ஆரம்பிக்கலாம் என்று மாடியில் பாலிதீன் சாக்கை விரித்து அதில் செம்மண், மணல், ஆட்டு எரு  ஆகியவற்றை கலந்து அதில் வெள்ளரி விதைகளை விதைத்தேன்.  ஆச்சர்யப்படும் வகையில் அவை நன்றாக வளர்ந்து நிறைய காய்கள் கிடைத்தன.



        அதற்குப பிறகு மாடிததோட்டத்தையும் செம்மைப்படுத்த ஆரம்பித்தேன்

    


(தோட்டம் தொடரும் ...)

5 கருத்துகள்:

  1. தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. தோட்டம் அருமையாக உள்ளது .
    நானும் இதுப்போல் ஒரு அழகான தோட்டம் உருவாக்கும்போது உங்களிடம் ஆலோசனை கேட்கிறேன் உதவுங்கள் நன்றி ,

    பதிலளிநீக்கு
  3. நன்றி, நன்றி. கண்டிப்பாக எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. தோட்டம் அருமை நன்பா!
    இன்னும் நிறய பகிரவும்.
    பாலா.

    பதிலளிநீக்கு