வெள்ளி, 11 மார்ச், 2022



எங்கள் வீட்டுத்தோட்டம் 2021

வெ  செல்வராஜ்  பொள்ளாச்சி 

சிவப்பு கொய்யா இந்த வருடம் நன்றாகவே காய்த்தது.  பழங்கள் நல்ல சுவையுடன் இருந்தன.  ஆனால் ஒரு பிரச்சினை, வௌவால்கள் மாடித்தோட்டத்திற்கும் வர ஆரம்பித்துவிட்டன.  நாளை பறிக்கலாம் என்று எண்ணியிருக்கும்போது இரவு வௌவால்கள் சாப்பிட்டுவிடுகின்றன.  அடுத்த காய்ப்பு பருவத்தில் ஏதாவுது ஏற்பாடு செய்ய வேண்டும். கீழே இருக்கும் சப்போட்டா மரத்தில் பாதிக்கும் மேற்பட்ட பழங்களை  வௌவால்களே சாப்பிட்டு விடுகின்றன.
 










மக்காச்சோளம் இரண்டு கதிர்கள் வந்தன, ஆனால்  இரண்டும் சரியில்லை.





மணி பிளான்ட் முன்பு நூறு அடி நீளத்திற்கும் மேல் இருந்தது. பக்கக் கிளைகள் அதிகம் இல்லாமல் இருந்தது.  இடையில் அறுந்துவிட்டது.  இப்போது சுமார் 30 அடி  நீளம் மட்டுமே உள்ளது.  ஆனால் நிறைய பக்கக் கிளைகள் வளர்ந்துள்ளன.  பெரும் தோரணமாக வளர்ந்துள்ளது.





வெள்ளரி அறுவடை சிறப்பாக இருந்தது.










இந்த வருடம் ஒரு மாம்பழம் மட்டுமே கிடைத்தது.









கேரட் நிறைய காய்த்தன.  ஆனால் காய்கள் மிகவும் சிறியதாகவே இருந்தன.   பருவம் தவறி விதைத்ததின் காரணமாக என நினைக்கிறேன்.




















ரோஜா பதியம் 
ரோஜாக்குச்சிகளை பதியம் இடும்போது பெரும்பாலும் துளிர்ப்பதில்லை.  ரோஜா பதியமிட சிறந்த வழி விண்பதியம் (AIR LAYERING).  இதுவரை ஐந்து முறை விண்பதியமிட்டு செடிகளை உருவாக்கியுள்ளேன்.  மா, கொய்யா, சப்போட்டா ஆகியவற்றில் முயன்று இதுவரை வெற்றி கிடைக்கவில்லை.






தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக